அவகேடோ பழத்தில் உள்ள மருத்துவ குணங்கள்

 நம்மில் பலருக்கு இந்த அவகேடோ எனப்படும் வெண்ணெய் பழத்தை பற்றி தெரிந்திருக்காது. காரணம் இதனை நாம் பலரும் வாங்கி சாப்பிடுவதில்லை. ஆனால் இதில் உள்ள மருத்துவ குணங்கள் தெரிந்தால் இதனை யாரும் வாங்காமல் இருக்க மாட்டார்கள்.ஏனெனில் இதில் அதிக அளவு மருத்துவ குணங்கள் உள்ளது. சூப்பர் மார்க்கெட்டில் பட்டர் ப்ரூட் என அழைக்கப்படும் இந்த அவகேடோ பழத்தில் உள்ள மருத்துவ குணங்களை பற்றி இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.





அவகேடோ பழத்தில் அதிக அளவு நம் உடலுக்கு தேவையான சத்துக்கள் உள்ளது. முக்கியமாக கொழுப்புகள், மாங்கனீசியம்,வைட்டமின் சி,வைட்டமின் பி ,வைட்டமின் கே, போன்ற சத்துக்கள் அதிக அளவில் உள்ளது. மருத்துவ ஆய்விலும் இந்த பழம் மனிதனின் ஆரோக்கியத்திற்கு நல்ல பலன் தரும் என கண்டறியப்பட்டுள்ளது. 

இதயம் தொடர்பான நோய்களைத் தவிர்க்க மிகவும் உதவியாக இருக்கும் பி 6 மற்றும் ஃபோலிக் அமிலம் ஆகியவை வெண்ணெய் பழத்தில் அதிகளவில் உள்ளன. எனவே, இதய நோயால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளவர்களுக்கு அருமருந்தாக வெண்ணெய் பழம் உள்ளது. மிகவும் உயர்வான தனித்த நிலையில் செறிவூட்டப்பட்ட பழமாக இருப்பதால், இது மாரடைப்பைத் தடுக்கும் பழமாகவும் உள்ளது.

வெண்ணெய் பழ எண்ணெய் தோலின் அமைப்பையும், தரத்தையும் மேம்படுத்த உதவும் மிகச்சிறந்த எண்ணெய்களில் ஒன்றாக உள்ளது. இந்த எண்ணெயை காய்ந்திருக்கும் தோலில் போட்டு மசாஜ் செய்வதன் மூலம் உங்கள் தோலில் உள்ள வறண்ட பகுதிகள் பளபளப்பு பெறுவதோடு, மீண்டும் அழகுற காட்சியளிக்கும். எனவே தான், வெண்ணெய் பழ எண்ணெயை அழகு சாதன பொருட்கள் தயாரிப்பில் பயன்படுத்துகிறார்கள்.

நீரிழிவு நோயாளிகளுக்கும் ஏற்றது - மிகவும் உயர்வான தனித்த நிலையில் செறிவூட்டப்பட்ட பழமாக இருப்பதால் வெண்ணெய் பழம் இரத்தத்தின் சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகிறது. இதன் கொழுப்புகள் இன்சுலின் உற்பத்தியை கட்டுப்பாட்டுக்குள் வைக்கிறது. எனவே தான், வெண்ணெய் பழம் குறைவான சர்க்கரை உள்ளவர்களின் பிரச்சனைகளைத் தீர்க்கும் மருந்தாக உள்ளது.

நம்முடைய உடலுக்கு பொட்டாசியம் சத்துக்கள் குறைவாக இருந்தால் இரத்த அழுத்தம் ஏற்பட வாய்ப்புள்ளது. அத்தகைய பொட்டாசியம் சத்துக்கள் வாழைப்பழத்தில் தான் அதிகம் உள்ளது என அனைவரும் நினைத்து கொண்டு இருப்போம். ஆனால் இந்த அவகேடோ பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் உள்ளது.எனவே தினமும் இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்த அழுத்தம் குறையும்.

இந்த வெண்ணை பழத்தில் அதிக அளவு லூடின் சத்து உள்ளது. எனவே இந்த பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் நம்முடைய கண்களுக்கு நல்லது. கண்களில் ஏற்படும் கண் சிவப்பு, கண்ணில் நீர் வடிதல் போன்ற பிரச்சனைகளுக்கு நாள்ல தீர்வு கிடைக்கும்.

உடல் எடையை குறைக்க நினைக்கும் அனைவருக்கும் இந்த பழம் நல்ல தீர்வை தரும். டயட்டில் இருப்பவர்கள் தினமும் இந்த பழத்தை எடுத்து கொண்டால் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை நீக்கி நம்முடைய உடலுக்கு தேவையான நல்ல கொழுப்புகளை அதிகரிக்கும்.