முட்டாள் தினத்தின் வரலாறு!!

 ஏப்ரல் 1 என்றாலே நமக்கு ஞாபகம் வருவது நமக்கு தெரிந்தவர்களே முட்டாள் ஆக்குவது தான்  ஏன் அப்படி என்றால் அன்று முட்டாளர்களின் தினம்  என்று  கூறுவார்கள். ஆனால் அதன் வரலாறு நமக்கு  தெரியாது முட்டாள் தினம் எப்படி உருவானது என்பதை பார்போம். 


வருடத்தின் முதல் நாள் என்ன என்று கேட்டால் அதற்கு பதில் ஜனவரி 1 ஆனால் ஐரோப்பியர்களிடம் இதே 1500 வருடங்களுக்கு முன்பு கேட்டால் ஏப்ரல் 1-ம்   என சொல்லி இருப்பார்கள். 

 

ஏன் அப்படி என்று கேட்டால் அப்போதைய ஐரோப்பா நாடுகள் ஜூலியன் நாட்காட்டி அப்படின்னு ஒரு நாள் காட்டில் தான் இருந்தது.
 அந்த நாள் காட்டியில் முதல் மாதமாக ஏப்ரல் மாதம் தான் இருந்தது. அதனால் அங்கு இருந்த எல்லாரும் ஏப்ரல் 1-ம் தேதிதான் வருடத்தின் முதல் தேதி என்று கூறினார்கள். அப்படின்னு சொல்லிட்டு இருக்காங்க இது இப்படி நடந்துட்டு இருக்கும்போது 13வது  போப்பாண்டவராக பொறுப்பேற்றுக் கொண்டார். கிரிகோரி  பதவிக்கு வந்தவுடன் அவர் செய்த முதல் வேலை காலண்டர் மாற்றியதுதான். 

 

1582  ஆம் ஆண்டு கிரிகோரியன் ஒரு காலண்டரை வெளியிட்டார். அதனால் அதற்கு கிரிகோரியன் காலண்டர் என்ற பெயரும் சூட்டப்பட்டது. இதெயெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது என பல நாடுகள் தெரிவித்தனர். அவர்கள் பழைய ஜுலியன் காலண்டரையே பின்பற்றத் தொடங்கினார்கள்.
ஆனால் போப்புக்கு ஜூலியன் காலண்டர் சுத்தமா பிடிக்கவே இல்லை. அதனால் ஜூலியன் காலண்டர் பின்பற்றும் மக்களின் இல்லத்திற்கு கிரிகோரியின் விசுவாசிகள் ஒரு பரிசை அனுப்பினார்கள் அதில் முட்டாள் தின வாழ்த்துகள் என்று இருந்தது அப்போது இருந்து தான் ஏப்ரல் 1 முட்டாள் தினம் என்று ஆனது.