வண்ணப் பொடியை தூவி வசந்த காலத்தை வரவேற்கும் நிகழ்வு தான் ஹோலி பண்டிகை பிரகலாதனின் தந்தையான இரணியனின் தங்கையான ஹோலிகாவின் மரண நாளில் தான் ஹோலி பண்டிகை கொண்டாடப்படுகிறது.
பிரகலாதன் அவர் கருவில் இருக்கும் போதே நாரதரால் நாராயணன் நாமம் கேட்டு நாராயணன் மேல் பற்றுக் கொண்டவராகவே பிறந்தார். அதுமட்டுமில்லமால் அவர் பிறந்ததிலிருந்து நாராயண நாமத்தை மட்டுமே உச்சரித்தது வந்தார். இதனால் பிரகலாதன் மேல் அவருடைய தந்தையான இரணியனுக்கு எப்பவுமே கோவம் இருந்தது.
அதனால் பிரகலாதனுக்கு பலவிதமான கொடுமைகள் செய்தார். அதில் உச்சகட்டமாக அவன் மேல் தீ மூட்ட திட்டமிட்டார் தீயின் வெப்பம் தாங்காமல் தன் நாமத்தை கூறுவான் என்று முடிவு செய்தார். அதற்கு இரணியன் தன் தங்கையின் உதவியை நாடினார். தீயினால் எவ்வித பாதிப்பும் அடையாத வரம் பெற்றவள் ஹோலிகா அதனால் அவள் மடியில் பிரகலாதனை வைத்து தீயில் அமர்ந்தாள் .
தீ முட்டப்பட்டது ஆனால் பிரகலாதனுக்கு எந்த தீங்கும் நேரவில்லை ஆனால் ஹோலிகா அந்த தீயின் வெப்பம் தாங்க முடியமால் எரிந்து சாம்பல் ஆனாள். அன்று முதல் ஹோலிகா இறந்த நாளில் ஹோலிபண்டிகை கொண்டாடப்படுகிறது.