எத்தனை முறை சாப்பிட்டாலும் அலுப்பாகாத உணவு, பிரியாணி. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தேடி சுவைப்பதும் பிரியாணியைதான்.மூன்று நண்பர்கள் ஒன்று சேர்ந்தால் அவர்களின் முதல் தேர்வு பிரியாணி தான்.
சமைப்பதும் சாப்பிடுவதும் ஒரு கலை. புராணங்களில்கூட நளபாகத்தையும் நளனையும் நாம் படித்திருக்கிறோம். வெறும் வயிற்றை அடைப்பதல்ல உணவு. மக்களின் பண்பாட்டில் உணவுக்கு முக்கியத்துவம் உண்டு.வரலாறுடன் இணைந்த உணவு, நம்மை சுற்றியிருக்கும் அனைத்து விஷயங்களை பற்றிய வரலாறும் முக்கியமானது தான்.பிரதேசமும், ஒவ்வொரு இனமும் தனக்கே உரிய சமையல் கலையை இன்றுவரை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
பிரியாணி என்னும் சொல் வறுத்த என்ற பொருள் தரும் Berya என்னும் பாரசீகச் சொல்லில் இருந்து வந்தது.
பிரியாணி என்ற வார்த்தையைக் கேட்டதும் பெரும்பாலானோருக்கு ஐம்புலன்களும் நடனமாடும். அப்படிப்பட்ட இதன் சொந்த ஊர் இந்தியா அல்ல என்பதுதான் நிதர்சனம்!
பெர்சிய நாட்டுப் போர்வீரர்களின் உணவே இன்று நாம் அனைவரும் விரும்பிச் சாப்பிடும் `பிரியாணி'.போர்வீரர்களுக்குப் போதுமான அளவு சத்துடைய உணவு இல்லாததைக் கண்ட ஷாஜஹானின் மனைவி மும்தாஜ், போர்வீரர்களுக்கு பிரியாணியின் செய்முறையைக் கற்றுக்கொடுத்தார். அன்று முதல், இஸ்லாமியர்கள் ஆட்சிசெய்த இடங்களிலெல்லாம் பிரியாணி பரவியிருந்தது.
பிரியாணி சமைக்கும் முறை பாரசீகத்தில் தோன்றி அந்நாட்டு வணிகர்கள், உலகம் சுற்றுவோர் மூலம் தெற்காசியாவுக்கு வந்தது. இன்று நாம் பிரியாணியைச் சமைக்கும் முறை இந்தியாவிலேயே உருவானது.
சேர்பொருட்கள்
நெய், ஜாதிக்காய், மின்,[2] மிளகு, கிராம்பு,[2] ஏலக்காய், கறுவா, பட்டை இலைகள், கொத்தமல்லி, புதினா இலைகள், இஞ்சி, வெங்காயம், மற்றும் பூண்டு என்பன பிரியாணியில் பயன்படுத்தப்படும் சில நறுமணப் பொருள்களும் தாளிதப் பொருள்களும் ஆகும்.அசைவ பிரியாணிகளில் இந்த நறுமணப் பொருட்களுடன் முதன்மை சேர்பொருளாக இறைச்சி—மாட்டிறைச்சி, கோழிக் கறி, ஆட்டு இறைச்சி, மீன் அல்லது இறால் இருக்கும்.பிரியாணியுடன் தயிர் பச்சடி(இது ராய்த்தா(கன்னடம்) எனவும் வழங்கப்படுகிறது.), குருமா, கறிகள், சாலட், சுட்ட கத்தரித் துவையல் அல்லது அவித்த முட்டை ஆகியனவும் துணை உணவாகத் தரப்படும்.
ஐதராபாத் பிரியாணி
ஐதராபாத் பிரியாணியானது இந்தியாவின் எல்லாப் பகுதிகளிலும் விரும்பப்படுகிறது. இது இந்திய சமையல் பாணியின் அங்கமாகக் கருதப்படுகிறது.முகலாயர்களின் ஆதிக்கம் அதிகம் இருந்த ஹைதராபாத்தில், பிரியாணியின் ஆதிக்கமும் குறைவில்லாமல் இருக்கிறது. இறைச்சியை மசாலாவோடு கலந்து இரவு முழுவதும் ஊறவிட்டு மறுநாள் அரிசியோடு கலந்து தயாராவது 'கச்சி பிரியாணி'.இறைச்சி மற்றும் மசாலாவை ஊற வைத்து உடனே வேகவும் வைத்து, தயாரான கிரேவியை சாதத்தோடு கலப்பது 'பக்கி பிரியாணி'.
தலைப்பாக்கட்டி பிரியாணி
தமிழ்நாட்டின் திண்டுக்கல் பகுதியில் தயாரிக்கப்படும் வகை. இங்கு நீண்ட பாசுமதி அரிசிக்கு மாறாக குறுகிய சீரக சம்பா என்றவகை அரிசி பயன்படுத்தப்படுவது சிறப்பாகும். சீரக சம்பா அரிசியின் மணம் நிச்சயம் அனைவருக்கும் வித்தியாச மணமாக இருக்கும்.அதிகப்படியான மிளகுத்தூள் இதில் உபயோகப்படுத்தியிருப்பார்கள்.சிறிய இறைச்சித் துண்டுகள், தயிர் மற்றும் எலுமிச்சை சாரின் 'Tangy' டேஸ்ட் இந்த அருமையான திண்டுக்கல் சீரக சம்பா பிரியாணியில் நிறைந்திருக்கும்.
ஆம்பூர் பிரியாணி
ஆற்காடு நவாப் குடும்பத்துக்குச் சமைத்துக் கொடுத்த அனுபவத்திலிருந்து தொடங்கியதுதான் இந்த ஆம்பூர் வகை பிரியாணி. சிக்கன், மட்டன், பீஃப் மற்றும் இறால் போன்ற இறைச்சிகளோடு சுவையான ஆம்பூர் பிரியாணியின் தனித்துவம்.. பெரும்பாலும் அசைவ பிரியாணி வகைகளாக இருந்தாலும் தாவர உணவுவகையிலும் தயாரிக்கப்படுகிறது.. ஐதராபாத் பிரியாணி போன்றே நறுமணப் பொருட்கள் சேர்க்கப்பட்டாலும் கூடுதலாக தக்காளியும் சிறிதளவு மஞ்சளும் சேர்க்கப்படுவதால் மற்ற பிரியாணிகளை விட சற்றே செம்மஞ்சளாக இருக்கும்.
பட்கல் பிரியாணி
கர்நாடக மாநிலத்தின் தட்சிண கன்னட மாவட்டத்தின் பட்கல் ஊரில் தயாரிக்கப்படும் இந்த பிரியாணி செய்முறை கடலோர கர்நாடகத்தில் புகழ் பெற்றுள்ளது. பட்கல் பிரியாணியும் ஆட்டிறைச்சி, மீன், கோழிக்கறி, மாட்டிறைச்சி மற்றும் இறால் இறைச்சிகளுடன் தயாரிக்கப்படுகிறது.இதில் வெங்காயம் பெரியளவில் பயன்படுத்தப்படுகிறது. பெரிய பானையின் அடியில் இறைச்சிக் கறிக்குழம்பும் வெங்காயமும் மேலாக அரிசியும் சமைக்கப்பட்டு வைக்கும்போதுதான் நன்கு கலக்கப்படுகின்றன.
லக்னோயி பிரியாணி
முதலில் கிரேவி மற்றும் இறைச்சியைப் பாதியளவு வேகவைத்து, பிறகு கனமான பொருளைக்கொண்டு இறுக்கி அடைத்து அதன்மேல் சுடச்சுட கரித்துண்டுகளைப் பரவி, அதன் சூட்டில் ரெடியாவது `தம் பிரியாணி'. இதுவே லக்னோயி பிரியாணியாகும்.