பூண்டு மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருள் என்பது அனைவருக்கும் தெரியும். அந்த பூண்டுகளை அன்றாட உணவில் சேர்ப்பதுடன், அதனை பச்சையாக சாப்பிட்டால், உயர் இரத்த அழுத்தம், குறைந்த இரத்த அழுத்தம், உயர் கொலஸ்ட்ரால், இதய நோய்கள், மாரடைப்பு, பெருந்தமனி தடிப்பு போன்றவைகளை கட்டுப்படுத்தலாம்.
பூண்டில் அல்லிசின், சல்ஃபர், ஜிங்க் மற்றும் கால்சியம் போன்ற அத்யாவசிய சத்துக்கள் அடங்கியுள்ளன; இவை ஆன்டி பையாட்டிக் மற்றும் பூஞ்சை எதிர்ப்பு பண்புகளை வெளிப்படுத்தி, ஆரோக்கிய நன்மைகளையும் அழகு நன்மைகளையும் வழங்குகின்றன. பூண்டினில் செலினியம் எனும் தாதுச்சத்தும் அதிகம் நிறைந்துள்ளது; இந்த செலினியம் சத்து புற்றுநோய்க்கு எதிராக போராடவும், வைட்டமின் இ சத்துடன் இணைந்து உடலின் ஆன்டி ஆக்சிடென்ட் சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.
பூண்டு, இதய நோய்களை தடுப்பது, நீரிழிவு நோயாளிகளின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவது, பல்வேறு புற்றுநோய்களை தடுப்பது என பலதரப்பட்ட ஆரோக்கிய நன்மைகளை அளிக்கின்றது; ஆய்வு படிப்பினைகளின் அடிப்படையில், இங்கு பூண்டு வழங்கும் ஆரோக்கிய நன்மைகள் குறித்து விளக்கப்பட்டுள்ளன.
நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பும் நபராக இருந்தால், நிச்சயம் பூண்டினை உட்கொள்ள வேண்டும்; ஏனெனில், உடல் எடை அதிகரிப்பின் ஆணி வேர் காரணத்தை கண்டறிந்து, அதனை களைந்தெறிய பூண்டு உதவுகிறது; இது கெட்ட கொழுப்புகள் மற்றும் அடிபோஜெனிக் திசுக்கள் உடலில் உருவாவதை தடுத்து, தெர்மோஜெனிசிஸ் திசுக்களின் உருவாக்கத்தை அதிகரிக்கிறது.
உடலின் இரத்த அழுத்த அளவை 10 mmHg (சிஸ்டோலிக் அழுத்தம்) இதிலிருந்து 8 mmHg (டயஸ்டாலிக் அழுத்தம்) ஆக குறைக்க, ஒரு முதிர்ந்த பூண்டில் இருக்கும் பயோ-ஆக்டிவ் சல்ஃபர் மற்றும் S-அல்லில்சிஸ்டெய்ன் போன்ற பொருட்கள் உதவுகின்றன. உடலில் இரத்த அழுத்தம் ஏற்பட முக்கிய காரணமாக திகழ்வது சல்ஃபர் ஆகும் மற்றும் ஆர்கானிக் சல்ஃபரை உடலுக்கு அளிப்பதன் மூலம் உடலில் இரத்த அழுத்த அளவை ஒரு கட்டுக்குள் வைக்கலாம்.
உடலின் வளர்சிதை மாற்ற குறைபாட்டால் ஏற்படும் ஒரு நோய் தான் நீரிழிவு நோயாகும்; இது ஏற்பட முக்கிய காரணமாக திகழ்வது ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை ஆகும். இந்திய IICT -இல் இருக்கும் அறிவியலாளர்கள், எலிகளுக்கு வெள்ளைப்பூண்டினை அளித்து நடத்திய சோதனையில், எலிகளின் உடலில் இரத்தத்தில் உள்ள குளுக்கோஸ் மற்றும் ட்ரைகிளிஸெரைட் போன்றவற்றின் அளவு குறைந்து காணப்படுவதாகவும், இன்சுலின் அளவு அதிகரித்திருப்பதாகவும் கண்டறிப்பட்டுள்ளது.
ஆராய்ச்சியாளர்கள், வெள்ளைப்பூண்டு எல்லாவித இருதய நோய்களையும் தடுக்கும் தன்மை கொண்டது என்பதற்கான எல்லா சான்றுகளையும் கொண்டுள்ளார்; பூண்டு, உடலின் கொலஸ்ட்ரால், கொழுப்பு, ட்ரைகிளிஸெரைட் சீரம், பிளேட்லெட் திரட்டல் போன்றவற்றை குறைத்து – ஆன்டி ஆக்சிடென்ட் செயல்பாடுகளை அதிகரிக்க உதவுகிறது.
வயது அதிகரித்தல் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை காரணமாக, உடல் எலும்புகள் பலவீனமடையலாம்; அதாவது, எலும்பு முறிவு மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற குறைபாடுகள் இளம் வயதிலேயே ஏற்படலாம். ஆஸ்டியோபோரோசிஸ் மற்றும் ஆர்த்ரிடிஸ் ஆகிய நோய்க்குறைபாடுகளுக்கு எதிராக போராடும் தன்மை பூண்டில் நிறைந்துள்ளது. ஒரு ஆய்வில், அறிவியலாளர்கள் எலிகளுக்கு பூண்டு எண்ணெயை அளித்து நடத்திய சோதனையின் முடிவில், எலும்பு பாதிப்பை ஏற்படுத்த காரணமான ஓவரியெக்டமி எனும் பொருளின் அளவை குறைக்க பூண்டு எண்ணெய் உதவியுள்ளது கண்டறிப்பட்டுள்ளது.
கர்ப்பமாக இருக்கும் பெண்கள் வெள்ளைப்பூண்டினை உட்கொள்வதால், உடல் எடை கட்டுப்பாட்டில் இருக்கும், உயர் இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை போன்றவை கட்டுக்குள் இருக்கும், மேலும் அபயகரமான நோய்களை தடுக்க உதவும். கர்ப்பிணிகள் மற்றும் தாய்ப்பால் கொடுக்கும் பெண்கள் பூண்டினை உண்பதால் பல நன்மைகள் விளையும்; ஆனால், அளவு அதிகமானால் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம். ஆகையால் உரிய மருத்துவ ஆலோசனைக்கு பின் உட்கொள்வது நலம் பயக்கும்.
கல்லீரலில் அதிகப்படியான கொழுப்பு படிந்தால், அது கல்லீரலை பலவீனமாக்கி விடலாம்; மது பழக்கம் இல்லாத நபர்கள் சந்திக்கும் கல்லீரல் கொழுப்பு பிரச்சனையை போக்க பூண்டு பயன்படுகிறது. கல்லீரல் அழற்சியை சரி செய்ய S-அல்லைல்கேப்டோசிஸ்டெய்ன் (SAMC) உதவுவதாகவும், பூண்டு எண்ணெயின் ஆன்டி ஆக்சிடேட்டிவ் பண்புகள் மது பழக்கம் இல்லாத நபர்கள் சந்திக்கும் கல்லீரல் கொழுப்பு குறைபாட்டை எதிர்த்து போராடும் தன்மை கொண்டவை.
UTI பிரச்சனைகளை தடுத்து, குணப்படுத்த உதவும் பழம் கிரான்பெர்ரி ஆகும்; ஆனால், பூண்டும் இப்பழத்திற்கு சளைத்தது அல்ல. சிறுநீரக சுவர்களில் பிரிவை ஏற்படுத்தி, UTI பிரச்சனைகள் மற்றும் சிறுநீரக நோய்த்தொற்றுகளை ஏற்படுத்தும் சூடோமோனாஸ் எரூஜினோசா எனும் நோய்க்கிருமியை தடுத்து, குறைபாட்டினை குணப்படுத்தும் தன்மை பூண்டில் உள்ளது என்று அறிவியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
வயிற்றில் அசௌகரியம் அல்லது சீரற்ற செரிமான அமைப்பு ஆகியவை ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கெடுக்கும் அம்சங்களாகும்; ஆகையால், குடல் சார்ந்த பிரச்னைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் நபர்கள், பூண்டினை உட்கொள்ள வேண்டியது அவசியம்.
பூண்டில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட் மற்றும் பூஞ்சை எதிப்பு பண்புகள், நம் உடலை காய்ச்சல் மற்றும் சளி போன்ற தொந்தரவுகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.