சீன புராணம், தேயிலை வரலாறு 2737 B.C.E. திறமையான ஆட்சியாளரும் விஞ்ஞானியுமான பேரரசர் ஷென் நோங் தற்செயலாக தேயிலை கண்டுபிடித்தார் என்று கூறுகிறது. சீன பேரரசர் ஷென் நாங், தோட்டத்தில் தண்ணீரை கொதிக்க வைத்தபோது, ஒரு தேயிலை மரத்தின் இலை அந்த பாத்திரத்தில் வந்து விழுந்தது. அந்த நீரை பருகிய பேரரசருக்கு, அதன் சுவை மிகவும் பிடித்துப்போனதால், அதை பற்றி ஆராய்ச்சி மேற்கொண்டார். அதன் மருத்துவ குணங்களை பற்றியும் கண்டறிந்தார் என்று கருதப்படுகிறது.
தென்மேற்கு சீனா, திபெத், வட இந்திய பகுதிகளில் தேயிலை செடி முதலில் தோன்றி இருக்கலாம். இந்த பகுதிகள் முழுவதிலும் பயணம் செய்த சீனவணிகர்கள், இங்கு பொதுமக்கள், தேயிலைகளை மருந்தாக கருதி மெல்வதை கண்டனர்.1823-ல் அசாமில், காமெல்லியா சின்னென்சிஸ் வகை தேயிலை செடியை ராபர்ட் புரூஸ் என்ற ஸ்காட்லாந்தியர் கண்டுபிடித்தார். அதன்பின், ஆங்கிலேயர்கள் வணிகரீதியான தேயிலை தோட்டங்களை இந்தியாவில் ஏற்படுத்தினார்கள். மணிராம் திவான் என்ற உள்ளூர் வியாபாரி, புரூஸை சிங்போ இன மக்களுக்கு அறிமுகப்படுத்தினார். அவர்கள் தேநீர் போன்ற பானத்தை பருகுவதை கண்டார். சிங்போ மக்கள், ஒரு வகை காட்டுச் செடியின் இலைகளை பறித்து, வெயிலில் அவற்றை காய வைத்து, பிறகு மூன்று இரவுகள் பனியில் அவற்றை வைத்தனர். பின்னர் ஒரு மூங்கில் குழாயில் வைத்து, அவற்றின் சுவை கூடும் வரை புகை போட்டனர். அதன் டிக்காசனை சுவைத்து பார்த்த புரூஸ், அது சீன தேயிலை போல இருந்ததை கண்டறிந்தார். 1830-ல் அவர் காலமான பிறகு, அவரின் சகோதரர் சார்லஸ் இதை முன்னெடுத்தார். சீன தேயிலையை விட இந்த தேயிலை ரகம் வேறு வகையாக இருப்பதை கண்டு, இதற்கு அசாமிக்கா என்று பெயரிட்டார்.
உலக தேயிலை வணிகத்தில் சீனாவின் ஏகபோகத்தை உடைக்க விரும்பிய கிழக்கிந்திய கம்பெனி, இந்தியா உள்ளிட்ட பிரிட்டனின் காலனி நாடுகளில் தேயிலையை பயிரிட தொடங்கியது. இதற்காக சீன ரக தேயிலை விதைகள், இந்தியா, இலங்கை உள்ளிட்ட காலனி நாடுகளுக்கு கடத்தி வரப்பட்டன. அங்கு வணிகரீதியாக அவை சோதிக்கப்பட்டன. பல வருட கடும் முயற்சிகளுக்கு பின், 1837-ல் மேல் அசாமின் சாபுவா பகுதியில் வணிகரீதியான முதல் தேயிலை தோட்டம் ஏற்படுத்தப்பட்டது.
சுக்கு மல்லி காபி, துளசி கசாயம் போன்ற பல வகையான பானங்களை மருத்துவ காரணங்களுக்காக பயன்படுத்திய தென் இந்தியர்கள், இன்று காபி மற்றும் தேநீரை அருந்துகிறார்கள்.
தேநீரின் நன்மைகள்
மன அழுத்த ஹார்மோன் அளவைக் குறைக்கிறது.
கறுப்பு(Black tea) தேநீர் மன அழுத்த நிகழ்வின் விளைவுகளை குறைப்பதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. ஒரு ஆய்வில் பங்கேற்பாளர்கள் ஒரு மாதத்திற்கு தினமும் 4 கப் தேநீர் அருந்திய பின்னர், மன அழுத்த ஹார்மோனான கார்டிசோலில் 20% வீழ்ச்சியை அனுபவித்தனர்.
குறுகிய கால நினைவை அதிகப்படுத்தும்.
அதில் உள்ள காஃபின்(caffeine) உங்கள் நினைவகத்தை மேம்படுத்த தேவையான ஊக்கத்தை உங்களுக்குத் தரக்கூடும், குறைந்தது சில மணிநேரங்களுக்கு.
இதயம் மற்றும் பிற உறுப்புகள்:
தேநீர் (டீ )இதயம் மற்றும் பிற உறுப்புகளைப் பாதுகாக்க உதவும்.
மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயத்தைக் குறைக்கும்.
மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படுவதற்கு பெரும்பாலும் காரணமான ஆபத்தான இரத்தக் கட்டிகளை உருவாகுவதை தடுக்க தேநீர் உதவுகிறது. சில ஆய்வுகள், கறுப்பு தேநீர் (பிளாக் டீ ) குடிப்பவர்களுக்கு ஆபத்தான மாரடைப்பு ஏற்படுவதற்கான ஆபத்து 70 சதவீதம் குறைவாக இருப்பதைக் கண்டறிந்துள்ளது.
உங்கள் எலும்புகளை பாதுகாக்கிறது.
தேநீர் குடிப்பவர்கள், தேநீர் குடிக்காதவர்களை விட வலுவான எலும்புகளைக் கொண்டிருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இது தேநீரில் உள்ள பைட்டோ கெமிக்கல்களின் நன்மையாக இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
இரத்த அழுத்தத்தைக் குறைக்க தேநீர் உதவும்.
ஒரு நாளைக்கு அரை கப் கிரீன் டீ மட்டுமே குடிப்பதால் உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் அபாயத்தை 50% வரை குறைக்க முடியும்.
செரிமானத்தில் உதவுகிறது.
தேனீர் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக உணவுக்குப் பிறகு செரிமான செயலுக்கு உதவியாக சீனாவில் பயன்படுத்தப்படுகிறது, மேலும் இது அதிக அளவு டானின்களைக்(Tannins) கொண்டிருப்பதால் செரிமானத்துக்கு உதவக்கூடும்
உங்கள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கிறது.
மெதுவான வளர்சிதை மாற்ற விகிதம் உங்கள் எடையைக் குறைக்க விடாமல் பண்ணுகிறதா? சில ஆய்வுகளின் படி, கிரீன் டீ உங்கள் வளர்சிதை மாற்ற விகிதத்தை சிறிது அதிகரிக்கக்கூடும், இது ஒரு நாளைக்கு 70-80 கலோரிகளை கூடுதலாக எரிக்க அனுமதிக்கிறது. இது பெரிதாகத் தெரியவில்லை என்றாலும், காலப்போக்கில் அது மேலும் அதிகரிக்கக்கூடும்.
புற்றுநோயிலிருந்து பாதுகாக்கிறது.
சமீபத்திய ஆய்வுகள், கிரீன் டீ தவறாமல் உட்கொள்ளும்போது நுரையீரல், மற்றும் மார்பக புற்றுநோய் ஏற்படுவதைக் குறைக்கிறது. புற்றுநோயைத் தடுப்பதற்கான உறுதியான வழி எதுவுமில்லை, ஆனால் ஒரு நாளைக்கு ஒரு கப் தேநீர் அருந்துவது நிச்சயமாக பாதுகாப்பு நன்மைகளுக்கு வழிவகுக்கும்.
தொற்றுநோயை எதிர்த்துப் போராட உதவுகிறது.
தேயிலை(டீ ) அல்கைலாமைன் ஆன்டிஜென்கள் எனப்படும் வேதிப்பொருட்களைக் கொண்டுள்ளது, இது உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். இது செப்சிஸ் போன்ற கடுமையான தொற்றுநோய் கட்டுப்படுத்த உதவும்.
உணவு விஷத்தன்மையை (Food poisioning) தடுக்கும்.
பச்சை தேயிலையில்( கிரீன் டீ ) காணப்படும் கசப்பான பொருட்களில் ஒன்றான Catechin, உணவு நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் பாக்டீரியாக்களை திறம்பட கொல்லும் மற்றும் அந்த பாக்டீரியாக்களால் உற்பத்தி செய்யப்படும் நச்சுக்களின் விளைவுகளை குறைக்கிறது.