ஜல்லிக்கட்டின் வரலாறு

 அழிந்துவரும் தமிழர் கலாசாரத்தில் எஞ்சியிருப்பது ஜல்லிக்கட்டு மட்டும் தான். பல நூற்றாண்டுகளைக் கடந்து தமிழினத்தின் அடையாளமாய் பல்வேறு தடைகளையும் தாண்டி இன்றும் நிலைத்திருக்கும் எமது வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு. 


ஏறுதழுவுதல் அல்லது ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் தொன்மையான குடிகளான ஆயர்களின் மரபுவழி விளையாட்டுகளில் ஒன்று.  ஏறுதழுவுதல் என்றால்  காளை மாட்டின் கொம்பை பிடித்து  மாட்டை மனிதன் அடக்குவது அல்லது கொம்பைப் பிடித்து விளையாடும்  வீர விளையாட்டு ஜல்லிக்கட்டு. காளைகளை இளைஞர்கள் விரட்டிச் சென்று அதன் திமிலின் மீது தொங்கியபடி குறிப்பிட்ட தூரம் செல்ல வேண்டும் அப்படி செல்பவரை வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார். வட தமிழகத்தில் வட மஞ்சுவிரட்டு என்ற பெயரில் இன்னொரு விதமான காளை விளையாட்டு இருக்கு அது என்னவென்றால் 20 அடி நீளக் கயிற்றால் காளையைக் கட்டி இருபுறமும் நிறைய பேர் இருந்து பிடிச்சுக்குவாங்க ஒரு சிலர் மட்டும் முன்னாடி போய் நின்று பரிசுப் பணத்தை எடுப்பார்கள் இது வட மஞ்சுவிரட்டாகும்.
ஜல்லி என்பது மாட்டின் கழுத்தில் கட்டப்படும்  அது புளியங் கம்பினால் ஆன வளையத்தைக் குறிக்கும்.  இது அப்போ இருந்து இப்போ வரைக்கும் மாட்டின் கழுத்தில் அணிவதை வழக்கமாக வைத்துள்ளார்கள். இதற்கு இன்னொரு காரணமும் சொல்கிறார்கள். 

50 ஆண்டுகளுக்கு முன்னாடி இந்திய நாணயத்தில் பழக்கத்தில் இருந்த சல்லிக் காசு என்ற நாணயத்தை மாட்டின் கொம்பில் கட்டி விடுவார்கள் காளையே அடக்கும் வீரருக்கு அந்த பணமுடிப்பு சொந்தமாகும் இதுதான் சல்லிக்கட்டு அப்படின்னு சொல்வார்கள் இதுவே நாளடைவில் ஜல்லிக்கட்டு என்று மறுவியது.


ஏறுதழுவுதல் என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராக உள்ளது. கொல்லக் கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் கொல்லேறு தழுவல் என்று சிறப்பு பெயரும் உண்டு. ஸ்பையின் உள்ளிட்ட நாடுகளில் கூட ஏறுதழுவுதல் விழாவாக நடைபெறுகிறது. சில நாடுகளில் இது விழாவாக மட்டும் நடைபெறுகிறது. ஆனால் ,இந்தியாவில் குறிப்பாக தமிழ்நாட்டில் மட்டும்தான் அது கலாச்சாரம் மற்றும் வாழ்வியலின் வெளிப்பாடு அமைந்துள்ளது. பழந்தமிழ் நூலான கலித்தொகையின் முல்லைக்கலியில் இடம்பெற்றுள்ள பாடல்களிலும், பட்டினப் பாலையிலும் மற்றும் சிலப்பதிகாரத்திலும் ஜல்லிக்கட்டு பற்றிய பல குறிப்புகள் உள்ளன. 


இது மட்டுமில்லாமல் சிந்து நாகரீகத்தில் ஏறுதழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. அதுக்கான ஒரு சான்றாக புதுடில்லி தேசிய கண்காட்சியில் சிந்து சமவெளி நாகரிகம் சார்ந்த முத்திரைகள் எல்லாம் பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதில்  ஒரு முத்திரையில் காளை உருவமும் அதை அடக்க முயலும் வீரரும் அந்த வீரரை காளை தூக்கி எறிவது போன்ற காட்சிகள் உயிரோட்டமான முறையில் வரையப்பட்ட ஒரு முத்திரை உள்ளது. இதிலிருந்து நமக்கு என்ன தெரியவருகிறது என்றால் கிமு 2000 ஆண்டுகளுக்கு முன்னாள் இருந்த  ஜல்லிக்கட்டு வழக்கத்தில் இருந்தது தெரிய வருகிறது.
2010-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஜனவரி 15 முதல், 5 மாதங்கள் ஜல்லிக்கட்டு நடத்த உச்சநீதிமன்றம் அனுமதி அளித்தது. 2011 மார்ச் மாதம் வாடி வாசல்களை அகலப்படுத்துதல் உள்ளிட்ட நிபந்தனைகளோடு ஜல்லிக்கட்டு நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்தது.

2011 ஏப்ரல் மாதம் ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் பீட்டா அமைப்பு வழக்கு தொடர்ந்தது. 2011 ஜூலை மாதம் ஜல்லிக்கட்டு காளைகளை 'விலங்குகள் காட்சிப்படுத்துதல்' பட்டியலில் இணைக்க மத்திய அரசு உத்தரவு பிறப்பித்தது. 2012 ஜனவரி மாதம் மதுரை, சிவகங்கை, திருச்சி உட்பட 8 இடங்களில் ஜல்லிக்கட்டு நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்தது.

2013 அக்டோபர் மாதம் மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த உயர்நீதிமன்ற மதுரை கிளை அனுமதி அளித்தது.

2014ம் ஆண்டு மே 7-ந் தேதி, காளைகள் துன்புறுத்தப்படுவதாகவும், காட்சிபடுத்துதல் பட்டியலில் காளைகள் இருப்பதால் அனுமதிக்க முடியாது என்று விலங்குகள் நல வாரியம் தொடர்ந்த வழக்கில் ஜல்லிக்கட்டுக்கு உச்சநீதிமன்றம் நிரந்தர தடை விதித்து தீர்ப்பளித்தது.



இதன் காரணமாக கடந்த 2015, 2016ஆம் ஆண்டுகளில் தமிழகத்தில் ஜல்லிகட்டு நடைபெறவில்லை. தொடர்ந்து தமிழக மக்கள் வலியுறுத்தியும் சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்தால்தான் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி அளிக்க முடியும் என்று மத்திய அரசு கைவிரித்து வருகிறது.

நடப்பாண்டில் விலங்குகள் பாதுகாப்பு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டு வந்து, ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். தமிழக முதல்வர் பன்னீர் செல்வமும் தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நடந்தே தீரும். தமிழர்களின் பண்பாடு, கலாச்சாரம் கட்டிகாக்கப்படும். ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக 2009-ல் திமுக கொண்டு வந்த பிராணிகள் வதை தடுப்பு சட்டத்திற்கு முரணானது என்று கூறி உயர்நீதிமன்றம் அந்த சட்டத்தை ரத்து செய்தது. ஆதலால், மாநில அரசால் சட்டத்தை திருத்த முடியாது'' என்று அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் காவிரியின் உரிமைக்கு திரளாத தமிழக காளையர்கள் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இணைந்து இருப்பது, இந்த விளையாட்டின் மீது தமிழக இளைஞர்களுக்கு எந்தளவிற்கு ஆர்வம் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. தமிழகத்தில் இந்தி எதிர்ப்புப் போராட்டம் மற்றும் இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக நடந்த கொடுமையின்போதுதான் இதுபோன்று இளைஞர்கள் திரண்டு இருந்தனர். தற்போது ஜல்லிக்கட்டு விளையாட்டுக்காக திரண்டுள்ளனர்.