
சென்னை : சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுபவர்கள் விவரத்தை சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது. சென்னையின் 4 மண்டலங்களில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனா பாதிப்பில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சென்னை மாநகராட்சியில் 55,969 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் 21,681 பேர் சிகிச்சையில் உள்ளனர். 33,441 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். அதிகபட்சமாக அண்ணாநகரில் 2,946 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். தேனாம்பேட்டையில் 2,363 பேர், ராயபுரத்தில் 2,212 பேர், கோடம்பாக்கத்தில் 2,094 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
from Dinakaran.com |30 Jun 2020 https://ift.tt/3gh8kqR